பரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை – மின்சார சபை உயர் நீதிமன்றில் தெரிவிப்பு

பரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை – மின்சார சபை உயர் நீதிமன்றில் தெரிவிப்பு

பரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை – மின்சார சபை உயர் நீதிமன்றில் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2023 | 11:56 am

Colombo (News 1st) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை இன்று(02) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக்கூடாது என வழங்கப்பட்ட உத்தரவை மீறி, இலங்கை மின்சார சபை செயற்பட்டமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா இந்த உ றுதிமொழியை வழங்கியதுடன், இலங்கை மின்சார சபையூடாக திட்டமிட்டவகையில் குறித்த காலப்பகுதிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் மன்றுக்கு கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பீ.பத்மன் சூரசேன, யசந்த கோத்தாகொட, ஷிரான் குணதிலக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு மீதான பரிசீலனை முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்