ஜனாதிபதி கண்டி விஜயம்; மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டார்

by Bella Dalima 02-02-2023 | 7:48 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டியில் இன்று நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த நிலையில், நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

75  ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தபால் திணைக்களம் வௌியிட்டுள்ள தபால் முத்திரை, மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட நாணயத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது .

ஜனாதிபதி சியம் மகா பீடம், மல்வத்து - அஸ்கிரிய பீடாதிபதிகளை இன்று சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். 

மல்வத்து மகா விகாரைக்கு இன்று முற்பகல்  சென்ற ஜனாதிபதி, திப்பட்டுவாவே ஶ்ரீசுமங்கல தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். 

மல்வத்து  பீடத்தின் பீடாதிபதி பஹமுனே சிறி சுமங்கல தேரர் தற்போதைய பொருளாதார நெருக்கடி , கடன் மறுசீரமைப்பு, அரசாங்க வரிக்கொள்கை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், கண்டி நகர அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக  மல்வத்து பீடத்தின் பிரதான பதிவாளர்  பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தற்போதைய வரிக்கொள்கை, பொருளாதார பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு சுமையாக மாறியுள்ளதாகவும்  அது தொடர்பில் வெகுவிரைவில் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்த  ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.