கத்தி முனையில் கொள்ளை: சந்தேகநபரை 14 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

by Staff Writer 02-02-2023 | 10:05 AM

Colombo (News 1st) யாழ்.வடமராட்சி - திக்கம் பகுதியில் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடமராட்சி - திக்கம் பகுதியில் கடந்த 31ஆம் திகதி அதிகாலை கத்தி முனையில் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது நகை அடகு வைக்கும் நிலையமொன்றில் அடகு வைப்பதற்காக குறித்த சந்தேகநபர் சென்றிருந்த போது 17 பவுன் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.