ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் அம்பானிக்கு

அதானியை பின்னுக்கு தள்ளி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அம்பானி

by Bella Dalima 02-02-2023 | 4:54 PM

Colombo (News 1st) Hindenburg ஆய்வறிக்கையின் எதிரொலியாக கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைவடைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். 

அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கௌதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 

4,400 கோடி டொலர்களை  இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டொலர்களுடன் தற்போது 15 ஆவது இடத்தில் அவர் உள்ளார். 
Reliance குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளார். 

இந்த நிலையில், ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கௌதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.