English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
01 Feb, 2023 | 4:17 pm
India: இந்திய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று (31) ஆரம்பமானது.
இதை தொடர்ந்து மக்களவையில் இன்று வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயற்பாடுகளை முதலில் பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆறுதல் கிடைத்துள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இந்திய ரூ.2.5 இலட்சத்தில் இருந்து ரூ.3 இலட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வருமான வரி தள்ளுபடி வரம்பை இந்திய ரூ.5 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆண்டுக்கு 7 இலட்சம் இந்திய ரூபா வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.
மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
👉 இந்திய ரூ. 3 இலட்சம் வரை – வரி இல்லை
👉 ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை- 5% வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
👉 ரூ.6 இலட்சம் முதல் ரூ.9 இலட்சம் வரை – 10% வரி
👉 ரூ.9 இலட்சம் முதல் ரூ.12 இலட்சம் வரை – 15% வரி
👉 ரூ.12 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை – 20% வரி
👉 ரூ.15 இலட்சத்திற்கு மேல்- 30% வரி
20 Sep, 2023 | 04:35 PM
19 Sep, 2023 | 04:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS