பாராளுமன்றத்தை ஔிப்படம் எடுத்தோருக்கு விளக்கமறியல்

பாராளுமன்றத்தை ஔிப்படம் எடுத்த இருவருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 31-01-2023 | 3:33 PM

Colombo (News 1st) பாராளுமன்ற அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ஔிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் அத்துமீறி நுழைந்த குறித்த நபர்கள் பாராளுமன்றத்தை ஔிப்படம் எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கருவாத்தோட்டத்தை சேர்ந்த 22 மற்றும் 31 வயதானவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.