.webp)
'கோட்டா கோ கம' வாசகத்தால் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக அனுருத்த பண்டார தாக்கல் செய்த மனுவை விசாரிக்க அனுமதி
'கோட்டா கோ கம' வாசகத்தை இணையத்தில் வெளியிட்டமைக்காக தம்மை கைது செய்தமைக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
வசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களால் அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் , மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 12 பேர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம், சட்டவிரோத தடுப்புக் காவலிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, சமத்துவ உரிமை என்பன மீறப்பட்டுள்ளதாக நீதியரசர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
சட்டத்தரணி நனுக்க நந்தசிறியுடன், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிகளிடமிருந்து 100 இலட்சம் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.