.webp)
Colombo (News 1st) பிரித்தானியாவின் East Sussex பிராந்தியத்தின் Hastings நகர கவுன்சிலரான லூசியன் பெர்னாண்டோ, Freedom of London விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலண்டன் மாநகர் மீதான அக்கறை, அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்களுக்கு Court of Common Council உறுப்பினர்கள் வாக்களித்து Freedom of London விருதை வழங்குகின்றனர்.
இதற்கமைய, இலண்டன் மாநகர மேயரின் பிரதிநிதி Freedom of London எனும் விருதை கவுன்சிலர் லூசியன் பெர்னாண்டோவிற்கு வழங்கியுள்ளார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் Hastings நகர கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டிருந்த 33 வயதான லூசியன் பெர்னாண்டோ, British Army, Metropolitan Police-இலும் பணிபுரிந்துள்ளார்.
இலங்கையின் கொழும்பு - கொட்டாஞ்சேனையை சேர்ந்த அவர், கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியின் பழைய மாணவராவார்.