மலையக மக்கள் மீதான பாகுபாடுகளை அகற்றுமாறு இலங்கை திருச்சபை அறிக்கை

மலையக மக்கள் மீதான பாகுபாடுகளை அகற்றுமாறு இலங்கை திருச்சபை அறிக்கை

மலையக மக்கள் மீதான பாகுபாடுகளை அகற்றுமாறு இலங்கை திருச்சபை அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2023 | 8:31 pm

Colombo (News 1st) மலையக மக்கள் நாட்டிற்கு  வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு  இலங்கை திருச்சபை, மெதடிஸ்ட் திருச்சபை மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். 

இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம்  பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பாகுபாடுகளை அகற்றுமாறு  இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் உண்மையில் பல இன, பல மதங்களைக் கொண்ட இலங்கையின் சமமான குடிமக்களாக மலைய மக்களை மாற்ற முடியும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை திருச்சபை, இலங்கை மெதடிஸ்ட் திருச்சபை, இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினர் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்