சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பங்களாதேஷூக்கு கடன்; முதல் தவணை விடுவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பங்களாதேஷூக்கு கடன்; முதல் தவணை விடுவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பங்களாதேஷூக்கு கடன்; முதல் தவணை விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2023 | 7:59 pm

Colombo (News 1st) இலங்கைக்கு பின்னர் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்ட பங்களாதேஷூக்கு சர்வதேச நாணய நிதியம் முதலாவது கடன் தவணையை இன்று விடுவித்தது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்டது.

பங்களாதேஷ் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி IMF-உடன் அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

பங்களாதேஷூக்கு 4.7 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக  சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்தது.

அதன் முதலாவது தவணையாக 476 மில்லியன் டொலர் விடுவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்