ரயில் விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு

ரயில் விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Jan, 2023 | 8:55 pm

Colombo (News 1st) தெஹிவளை பகுதியில் இன்று(30) இடம்பெற்ற விபத்தொன்றில் நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் நிட்சிங்கம் நிபோஜன் உயிரிழந்துள்ளார்.

நியூஸ்பெஸ்ட்டின் கிளிநொச்சி பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 

இன்று(30) மாலை 5.30 அளவில் தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

ஒரு பிள்ளையின் தந்தையான நிபோஜன் கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காக நியூஸ்பெஸ்ட்டுடன் இணைந்து சேவையாற்றியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்