பாகிஸ்தான் வெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலி

பாகிஸ்தான் வெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 30-01-2023 | 4:03 PM

Colombo (News 1st) பாகிஸ்தானின் பெஷாவர்(Peshawar) நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பதிவான வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன்போது 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கட்டடத்தின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.