நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு - தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

by Staff Writer 29-01-2023 | 2:32 PM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

பல நகரங்களிலும் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 100 முதல் 150 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர், பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.