.webp)
Colombo (News 1st) தமக்கு எதிரான குற்றப்பத்திரிகை கிடைக்கப்பெறும் வரை பொறுமையின்றி காத்திருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் தொடர்பில் மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான குற்றப்பத்திரிகையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று(29) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த குற்றப்பத்திரிகைக்கு ஆளுங்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.