நேபாள துணை பிரதமர் இராஜிநாமா

குடியுரிமை பிரச்சினையால் நேபாள துணை பிரதமர் இராஜிநாமா

by Bella Dalima 28-01-2023 | 5:20 PM

Nepal: நேபாள துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான Rabi Lamichhane தனது அனைத்து பதவிகளையும் இராஜிநாமா செய்துள்ளாா்.

பாராளுமன்ற தோ்தலில் சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நேபாள துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான Rabi Lamichhane தனது அனைத்து பதவிகளையும் இராஜிநாமா செய்துள்ளாா்.

அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வசித்து வந்த Rabi Lamichhane, கடந்த 2014-ஆம் ஆண்டு தனது சொந்த நாடான நேபாளத்திற்கு திரும்பினாா். பின்னா், ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சியைத் தொடங்கினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தோ்தலில் அந்தக் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்று, நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

மாவோயிஸ்ட் மைய கட்சியை சோ்ந்த Pushpa Kamal Dahal நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றாா். இதன்போது,  Rabi Lamichhane துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றாா்.

முன்னதாக, அவர் 2018-இல் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டாா். ஆனால், அதன் பிறகு நேபாள குடியுரிமையை பெறுவதற்கு அவா் விண்ணப்பிக்கவில்லை.

இந்த நிலையில், நேபாள குடியுரிமையை முறைப்படி பெறாமல் தோ்தலில் போட்டியிட்டு, நாட்டின் துணை பிரதமா் ஆனதை எதிா்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்ட பிறகு, நேபாள குடியுரிமை சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகளை  Rabi Lamichhane மேற்கொள்ளவில்லை. அதனால், நேபாள பிரதிநிதிகள் சபைக்கான தோ்தலில் வேட்பாளராக  Rabi Lamichhane போட்டியிட முடியாது என்பதோடு, அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவும் முடியாது’ என்று தீா்ப்பளித்தது.