போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

by Bella Dalima 28-01-2023 | 3:53 PM

​Colombo (News 1st) அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த போட்டி பரீட்சைக்கு 40 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்க முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலம் நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பாடசாலை கட்டமைப்பில் 23,000 -இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

2023 முதலாம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.