நியூஸ்ஃபெஸ்ட் தலைமையக வளாகத்தில் செய்தியாளர்கள் மாநாடு

நியூஸ்ஃபெஸ்ட் தலைமையக வளாகத்தில் செய்தியாளர்கள் மாநாடு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2023 | 7:34 pm

Colombo (News 1st) நாட்டின் நாலா திசைகளிலும் உள்ள நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் இன்று நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

நியூஸ்ஃபெஸ்ட் தலைமையக வளாகத்தில் செய்தியாளர்கள் மாநாடு இன்று முற்பகல் நடைபெற்றது.  

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக ஊடகப்பணியை முன்னெடுத்து வரும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் எமது சக்தியாகும்.

நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வியாபித்திருக்கும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரன் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள், அதிகாரிகள், செய்தியார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்