நாளாந்த மின்வெட்டு தொடரும்: மின்சார சபை அறிவிப்பு

நாளாந்த மின்வெட்டு தொடரும்: மின்சார சபை அறிவிப்பு

நாளாந்த மின்வெட்டு தொடரும்: மின்சார சபை அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2023 | 4:43 pm

Colombo (News 1st) நாளாந்த மின்வெட்டு திட்டமிட்டவாறு  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க,  நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி முதல் உயர் தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை என  பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார்.

அனுமதியின்றி மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் பட்சத்தில், அது தொடர்பில் அறிவிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

077 56 87 387 என்ற இலக்கத்திற்கு WhatsApp மூலமாகவோ 0112 39 26 41 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ முறைப்பாடு செய்ய முடியும்.

அத்துடன், [email protected] என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை மின்னஞ்சல் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் விநியோகத் தடை தொடர்பில் இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்