தேர்தலின் பின்னர் கிராமங்களில் இளைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும்: சஜித் பிரேமதாச

by Staff Writer 28-01-2023 | 7:21 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை - சூரியவெவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இன, மத, கட்சி பேதங்கள் இன்றி இந்த ஆலோசனைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, அற்கான அதிகாரங்கள் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதன் ஊடாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள், முறைகேடுகள், இலஞ்சம் ஊழல் தொடர்பான விடயங்களை இளைஞர் குழுவினால் ஆராய முடியுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்