கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்; வீதிகள் பல மூடப்படுகின்றன

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்; வீதிகள் பல மூடப்படுகின்றன

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2023 | 8:10 pm

Colombo (News 1st) 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் காரணமாக இன்று (28) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த காலப் பகுதியில் கொழும்பு, காலி முகத்திடலை மையமாகக் கொண்டு 20 வீதிகள் மூடப்படவுள்ளதுடன், மேலும் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

👉 காலி முகத்திடல் மத்திய வீதி
👉 காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து N.S.A சுற்றுவட்டம் வரையான பகுதி 
👉 சைத்திய வீதி
👉 கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் நோக்கிச் செல்லும் வீதி
👉 கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய வீதிக்குள் பிரவேசிக்கும் வீதி 
👉 யோர்க் வீதியில் இருந்து இலங்கை வங்கி மாவத்தை வரையான பகுதி
👉 செத்தம் வீதி
👉 முதலிகே மாவத்தை
👉 பாரோன் ஜயதிலக்க மாவத்தைக்குள் பிரவேசிக்கும் வீதி
👉 கான் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் இருந்து Y.M.B.A சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிக்கும் வீதி
👉 CENOR சந்தியில இருந்து ஓல்கட் மாவத்தை CTO சந்தி 
👉 CTO சந்தியில் இருந்து லோட்டஸ் வீதி
👉 செரமிக் சந்தி 
👉 காமினி சுற்றுவட்டத்தில் இருந்து T.R.விஜேவர்தன மாவத்தை 
👉 கொம்பனித்தெரு பொலிஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ரீகல் சந்தி 
👉 மார்க்கன் மாக்கார் மாவத்தை
👉 சாரணர் மாவத்தை சந்தியில் இருந்து காலி முகத்திடல்
👉 சாரணர் மாவத்தை 
👉 காலி வீதியின் பம்பலப்பிட்டி சந்தியில் இருந்து கொள்ளுபிட்டி 
👉 கரையோர வீதியில் பம்பலப்பிட்டி ரயில் நிலைய வீதி 
👉 துன்முல்ல சந்தியில் இருந்து பௌத்தாலோக்க மாவத்தை ஊடாக ஆர்.ஏ.டி மெல் மாவத்தை 
👉 லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து சென். மைக்கல் சுற்றுவட்டம்

ஆகிய வீதிகள் மூடப்படவோ அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவோ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த பிரதேசங்களில் வசிப்போர் போக்குவரத்து பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்தில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்