English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Jan, 2023 | 5:20 pm
Nepal: நேபாள துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான Rabi Lamichhane தனது அனைத்து பதவிகளையும் இராஜிநாமா செய்துள்ளாா்.
பாராளுமன்ற தோ்தலில் சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நேபாள துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான Rabi Lamichhane தனது அனைத்து பதவிகளையும் இராஜிநாமா செய்துள்ளாா்.
அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வசித்து வந்த Rabi Lamichhane, கடந்த 2014-ஆம் ஆண்டு தனது சொந்த நாடான நேபாளத்திற்கு திரும்பினாா். பின்னா், ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சியைத் தொடங்கினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தோ்தலில் அந்தக் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்று, நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
மாவோயிஸ்ட் மைய கட்சியை சோ்ந்த Pushpa Kamal Dahal நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றாா். இதன்போது, Rabi Lamichhane துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றாா்.
முன்னதாக, அவர் 2018-இல் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டாா். ஆனால், அதன் பிறகு நேபாள குடியுரிமையை பெறுவதற்கு அவா் விண்ணப்பிக்கவில்லை.
இந்த நிலையில், நேபாள குடியுரிமையை முறைப்படி பெறாமல் தோ்தலில் போட்டியிட்டு, நாட்டின் துணை பிரதமா் ஆனதை எதிா்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்ட பிறகு, நேபாள குடியுரிமை சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகளை Rabi Lamichhane மேற்கொள்ளவில்லை. அதனால், நேபாள பிரதிநிதிகள் சபைக்கான தோ்தலில் வேட்பாளராக Rabi Lamichhane போட்டியிட முடியாது என்பதோடு, அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவும் முடியாது’ என்று தீா்ப்பளித்தது.
29 Mar, 2023 | 08:05 AM
28 Mar, 2023 | 10:05 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS