இரண்டு அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2023 | 4:12 pm

Colombo (News 1st) சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக W.A.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, R.M.W.சமரதிவாகர, நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்