.webp)
Pakistan: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 1.1 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 6 பில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கடந்த 2019 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானை கடந்த ஆண்டு தாக்கிய வௌ்ளப்பெருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அந்நாடு கோரியிருந்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு மேலும் 1.1 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்தது. என்றாலும், அந்த நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது.
அதனை விடுவிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறே அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பணவீக்கம் டிசம்பரில் 24.5% பதிவாகியுள்ளதுடன், சர்வதேச நாணய நிதிய கடனுக்கான வட்டிவிகிதம் 17% ஆக காணப்படுகின்றது.
நாட்டிற்கான இறக்குமதிகளை மேற்கொள்ளத் தேவையான போதிய அந்நியச் செலாவணி இன்மையினால், பாகிஸ்தான்
வௌிப்புற நிதி ஒத்துழைப்பை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் நிதியமைச்சர் அமெரிக்க திறைசேரி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கான பதிலை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை.