படகு கவிழ்ந்து காணாமற்போனவரின் சடலம் மீட்பு

தியவன்னா ஓயாவில் படகு கவிழ்ந்து காணாமற்போனவரின் சடலம் மீட்பு

by Bella Dalima 27-01-2023 | 4:23 PM

Colombo (News 1st) பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள தியவன்னா ஓயாவில் படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காணாமற்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தியவன்னா ஓயாவில் மிதந்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ராஜகிரிய பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் காணாமற்போயிருந்தார். அவரின் சடலமே தற்போது மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த படகில் நால்வர் பயணித்துள்ளதுடன், மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இராஜகிரியவை சேர்ந்த நால்வர் நேற்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக தியவன்னா ஓயாவிற்கு சென்றிருந்தபோது அனர்த்தத்தை எதிர்கொண்டனர்.