கம்பளை தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

கம்பளை தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து; இருவர் காயம்

by Bella Dalima 27-01-2023 | 3:18 PM

Colombo (News 1st) கம்பளை - குருந்துவத்தை, மெதகொட, வெட்டகேதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். 

இன்று அதிகாலை பரவிய தீ, கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

காயமடைந்த இரண்டு ஊழியர்களும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.