.webp)
Colombo (News 1st) கடனை மீள செலுத்துவதற்கு 02 வருட சலுகைக் காலத்தை இலங்கைக்கு வழங்க சீன Exim வங்கி தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்வதால், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு இயன்றளவு உதவி வருவதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.