நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி அறவிட இடைக்காலத் தடை

நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி அறவிட இடைக்காலத் தடை

நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி அறவிட இடைக்காலத் தடை

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2023 | 8:07 pm

Colombo (News 1st) ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, முற்பணம் சார்ந்த வருமான வரியை ஆட்சேபித்து இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபால ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதிகளின் சம்பளம் , கொடுப்பனவுகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்டிற்கு கூறினார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்