கோப்பாயில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது

by Bella Dalima 26-01-2023 | 8:24 PM

Colombo (News 1st) யாழ். கோப்பாயில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட 11 பேர் நேற்று (26) கைது செய்யப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை (ஜன.21) யாழ். கோப்பாயில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை யாழ். கோப்பாய் மத்தி,  இராசவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில்,  உயிரிழந்தவரின் மனைவி, மனைவியின் தாய், தந்தை, மனைவின் இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட 11 பேர்  இன்று கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட நபர் மோட்டார் சைக்கிகள் திருத்தும் இடமொன்றை நடத்தி வந்துள்ளதுடன், கடந்த சனிக்கிழமை இரவு அங்கிருந்து வீடு திரும்பும்போது, சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் குறித்த நபர் காயங்களுடன் வீடு திரும்பியபோது, மனைவி உள்ளிட்ட குடும்பத்தவர்கள் இணைந்து அவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக  குறித்த குடும்பத்தவர்கள் ஆரம்பத்தில் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தனர். 

எனினும், கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் இந்த கொலையை மனைவி உள்ளிட்ட குடும்பத்தவர்களே மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே இவர்கள் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.  

சம்பவத்தில் கோப்பாய் மத்தி, இராசவீதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டார்.