மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மனு தாக்கல்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு எதிராக எழுத்தாணை மனு தாக்கல்

by Bella Dalima 24-01-2023 | 5:27 PM

Colombo (News 1st) ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மின் பாவனையாளர்கள் சங்கம், அதன் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இந்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

மனுக்களின் பிரதிவாதிகளாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், இலங்கை மின்சார சபை, அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர். 

மின் கட்டணத்தை இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அதிகரிக்க வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியிருந்த போதிலும், அதனை கருத்திற்கொள்ளாது, அமைச்சரவை குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் சுயாதீன ஆணைக்குழுவான பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் விடுப்பதற்கான அதிகாரம் பிரதிவாதிகளுக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அவசரமான விடயமாக இதனை கருத்திற்கொண்டு, இந்த மனுவை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும், மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.