.webp)
Colombo (News 1st) டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று (24) நண்பகல் 2.28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு, 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலும் உத்தராகண்டிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்திய தலைநகர் டெல்லியில் உணரப்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பலரும் வீடுகளில் இருந்து சாலைகளுக்கு அவசரமாக வெளியேறியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.