நடிகர் ஈ.ராம்தாஸ் காலமானார்

நடிகர் ஈ.ராம்தாஸ் காலமானார்

நடிகர் ஈ.ராம்தாஸ் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Jan, 2023 | 7:27 am

Colombo (News 1st) இந்திய தமிழ் சினிமாவின் நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராம்தாஸ் நேற்றிரவு(23) காலமானார்.

தந்தை நேற்றிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக ஈ.ராம்தாஸின் மகன் சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(24) இடம்பெறவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ், குக்கூ, காக்கிச் சட்டை, மெட்ரோ, தர்மதுரை மற்றும் மாரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் ஈ.ராம்தாஸ்.

பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்