.webp)
Colombo (News 1st) மன்னார் - பேசாலை பகுதியில் மீனவரொருவரின் சடலம் இன்று(23) கரையொதுங்கியுள்ளது.
கடந்த 20ஆம் திகதி இரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 03 மீனவர்களில் ஒருவரே இன்று(23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த 03 மீனவர்களும் கடலுக்குச் சென்ற போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக படகை கடலில் நங்கூரமிட்டு விட்டு கரைக்கு திரும்பியுள்ளனர்.
இதன்போது 02 மீனவர்கள் நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.