சீனாவின் டீசலை விநியோகிக்க 122 மில்லியன் தேவை

சீனா வழங்கிய டீசல் தொகையை விநியோகிக்க 122 மில்லியன் ரூபா செலவாகும் - மஹிந்த அமரவீர

by Staff Writer 23-01-2023 | 2:39 PM

Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் நாட்டின் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட டீசல் தொகையை விநியோகிப்பதற்கு சுமார் 122 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த டீசல் தொகை நாடளாவிய ரீதியில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் பௌசர் மூலம் விநியோகிக்கப்படுவதாக என அமைச்சர் தெரிவித்தார்.

அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிரிடப்பட்ட தொகைக்கு ஏற்ப இலவசமாக எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, இரண்டரை ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயி ஒருவருக்கு 15 லீட்டர் டீசல் வழங்கப்படவுள்ளது.