.webp)
Colombo (News 1st) மினுவாங்கொடை - வேகோவ்வ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மகனின் தாக்குதலில் 82 வயதான தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று(22) முன்னெடுக்கப்படவுள்ளது.