.webp)
Colombo (News 1st) நாளை மறுதினம்(24) முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை கண்டி வீதியின் வரக்காபொல - அம்பேபுஸ்ஸ இடையிலான பகுதியில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த வீதிக்கு காபட் இடப்படவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காலப்பகுதியில் இவ்வீதியில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படக்கூடும் எனவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
அதற்கமைய, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாவனெல்ல - ரம்புக்கனை வீதியின் குருணாகல் வரை பயணித்து, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து அல்லது கேகாலை வரை பயணித்து பொல்கஹவெல, அலவ்வ, மீரிகம, பஸ்யால ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் போது, பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம ஊடாக குருணாகல் வழியாக கண்டி நோய்யி பயணிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.