.webp)
Colombo (News 1st) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு மறு அறிவித்தல் வரை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை விதிக்கபட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர்களும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அல்லது ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டத்திலும் பாடநெறியிலும் பயிற்சியிலும் பங்கேற்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீக்கப்படும் வரை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் இலங்கையின் கழக அணிகளும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உரிமையில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.