உயர்தர பரீட்சை நாளை(23) ஆரம்பம்

உயர்தர பரீட்சை நாளை(23) ஆரம்பம்

by Staff Writer 22-01-2023 | 2:46 PM

Colombo (News 1st) 2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை(23) ஆரம்பமாகவுள்ளது.

278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

நாளை(23) ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைடையவுள்ளது.