சம்பந்தனை சந்தித்தார் ஜனாதிபதி

13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாட சம்பந்தனை சந்தித்தார் ஜனாதிபதி

by Staff Writer 21-01-2023 | 7:36 PM

Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருடான சந்திப்புகளின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

நேற்று (20) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

13 ஆம் அரசிலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் காணி விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது மிக முக்கியமானது என இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் நேற்று ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.