10% நெல் விளைச்சல் பாதிப்பு

மஞ்சள் எரிநோய் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் 10% நெல் விளைச்சல் பாதிப்பு

by Staff Writer 21-01-2023 | 4:37 PM

Colombo (News 1st) நெல் விளைச்சலின் மொத்த அளவில் 10 வீதமானவை இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. 

மஞ்சள் எரிநோய் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார். 

நெல் விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தமது குழுவினர் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

பதலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனமும் துறை ரீதியான ஆய்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில், இது தொடர்பிலான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

மஞ்சள் எரிநோய் தாக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது.