சீட் பெல்ட் அணியாததால் ரிஷி சுனக்கிற்கு அபராதம்

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்

by Bella Dalima 21-01-2023 | 5:56 PM

Colombo (News 1st) இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடியே வீடியோ மூலம் பேசினார். 

அப்போது அவர் காரில் சீட் பெல்ட் (seat belt ) அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. 

நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டிருந்தார். 

இந்த நிலையில், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்கிற்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். 

அவருக்கு 100 பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.