இரத்த வௌ்ளத்தில் நிர்வாணமாக ஆணின் சடலம் மீட்பு

கல்கிசையில் இரத்த வௌ்ளத்தில் நிர்வாணமாக ஆணின் சடலம் மீட்பு

by Bella Dalima 21-01-2023 | 4:28 PM

Colombo (News 1st) கல்கிசை - பொச்சிவத்தயிலுள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடையை சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரழந்துள்ளார். 

பஸ் சாரதியாக சேவையாற்றிய குறித்த நபர், தாம் தங்கியிருந்த வாடகை வீட்டில் வீழ்ந்து கிடப்பதாக அவருடன் தங்கியிருந்த ஒருவரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த வௌ்ளத்தில் நிர்வாணமாக குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.