முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

by Bella Dalima 20-01-2023 | 5:02 PM

Colombo (News 1st) முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மீள திருத்தப்பட்டுள்ளது. 

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார். 

இதற்கமைய, வௌ்ளை நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கபில நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.