.webp)
Colombo (News 1st) கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை (21) முற்பகல் 11 மணி முதல் இரவு 08 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு - தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.