.webp)
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைதீஸ்வரி (87) நேற்று (18) இரவு காலமானார்.
நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ள வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான நாய் சேகர் திரைப்படம் மூலம் ஹீரோவாக மீண்டும் களமிறங்கினார்.
இந்நிலையில், மதுரை - வீரகனூரில் வசித்து வந்த வடிவேலுவின் தாயார் வைதீஸ்வரி என்கின்ற பாப்பா வயதுமூப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, வடிவேலு தாயாரின் மறைவுக்கு அரசியல் பிரமுகர்களும் திரைத்துறையினரும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.