விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு COVID-19

Golden Globes விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு COVID-19

by Staff Writer 18-01-2023 | 12:48 PM
Colombo (News 1st) கோல்டன் குளோப்ஸ் (Golden Globes) விருது விழாவிற்கு சென்ற திரையுலகப் பிரபலங்கள் பலருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விருது விழாவிற்குச் சென்று சில தினங்கள் கடந்துள்ள நிலையில், தமக்கு COVID-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக Collin Farrell, Brendan Gleeson, Jamie Lee Curtis, Michelle Pfeiffer உள்ளிட்ட பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) ஔிபரப்பாகிய கிரிட்டிக்ஸ் சொய்ஸ் அவோர்ட்ஸ் விருது விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு COVID-19 பரிசோதனை ​மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போதே தாம் தொற்றுக்குள்ளாகியிருப்பதை பிரபலங்கள் பலர் அறிந்துகொண்டுள்ளனர். இதனால் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டிருந்தது.