வசந்த முதலிகே, சேபால் அமரசிங்கவிற்கு விளக்கமறியல்

வசந்த முதலிகே, சேபால் அமரசிங்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 17-01-2023 | 4:54 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு முறைப்பாட்டாளர் மற்றும் சந்தேகநபர் தரப்பிற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

இதனிடையே,  தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை நிந்தித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சேபால் அமரசிங்க, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் வருவதால், அவருக்கு பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ், இந்த உத்தரவை பிறப்பித்தார்.