STF சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் கொலை

STF சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை

by Staff Writer 16-01-2023 | 2:17 PM

Colombo (News 1st) தம்பதெனிய - உதியாவல பிரதேசத்தில் நேற்றிரவு(15) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டே இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 41 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின்(STF) சார்ஜன்ட் ஒருவரும் அடங்குகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.