மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல்

by Staff Writer 16-01-2023 | 2:28 PM

Colombo (News 1st) உழவர் பெருமக்கள் கடவுளாக செல்வமாக, பிள்ளையாக, நண்பனாகக் கருதும் எருதுகள் மற்றும் பசுக்களுக்கான பண்டிகையே மாட்டுப் பொங்கலாகும்.

உழவுத் தொழிலுக்கு பங்களிக்கும் காளைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையான பசுக்களுக்கும் இத்திருநாளில் நன்றி பகர்வது மரபாகும்.

மாடுகளைக் நீராட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து அழகு பார்ப்பது இந்நாளின் வழக்கமாகும்.

கூரான கொம்பில் சலங்கை கட்டி, புதிய மூக்கணாங்கயிறிட்டு உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்ய இம்முறையும் உழவர்கள் மறக்கவில்லை.

தொழுவத்தில் பொங்கல் பொங்கி, கற்பூர தீபாராதனைக் காட்டி வணங்கி, கால்நடைகளுக்குப் பொங்கல், பழம் கொடுக்கும் வழக்கம் வழக்கொழியாது இன்றும் தொடர்கிறது.