.webp)
Colombo (News 1st) அரச வைத்தியசாலைகளில் பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அரச பற்சிகிச்சை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல் அடைப்புகள், வேர் சிகிச்சைகள், பற்சொத்தை அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் மஞ்சுள ஹேரத் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்களுக்கு காத்திருப்புப் பட்டியில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போது, அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.