.webp)
Colombo (News 1st) நாளை(16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.